மாதம் 50 ஆயிரம் சம்பாதியுங்கள் - வாழ்க்கை முழுதும் !!!


மாதம் 50 ஆயிரம் சம்பாதியுங்கள் - வாழ்க்கை முழுதும் !!!

Click here to read in English

எப்படி? முடியுமா என்ன? சரி. இந்தப்பதிவின் தலைப்பு ஒரு பொய். நீங்கள் முறைப்பது தெரிகிறது. "தன் வினைத் தன்னைச் சுடும்" என்பதறிவேன்

ஆனால், "தர்மம் தலை காக்கும்" என்றும் அறிவேன். பொய் தலைப்பு வைத்ததற்காக வினை என்னைச் சுடும் முன், தர்மம் காக்கட்டும். தலைப்பை உண்மையாக்கினால் என்ன??

எங்கள் பதிவுகள் அனைத்தும் நீங்கள் தொடர்ந்து வாசித்திருந்தால் 2 வார்த்தைகளே அனைத்திலும் ஆக்கிரமித்துள்ளதை அறிவீர்கள் - சேமிப்பு, கூட்டு வட்டி. வாசகர்கள் அனைவருக்கும் புரியும் வரை, மீண்டும் அவையே!!!

சேமிப்பு - 40+ வயதுடைய சிலவற்றை அணுகிய போது தெரியவந்தது.பெரும்பாலானவர்களின், மொத்தக் குடும்பத்தின் வருமானம் குறைந்தபட்சம் 1,00,000. எங்கள் ஆலோசனை என்னவென்றால், 30% சேமியுங்கள். 1,00,000 வருமானம் எனில், 30,000 சேமியுங்கள். இது 8 வருடங்களுக்கு. அதன் பின்னர், சேமித்தத் தொகையை 7 வருடங்களுக்கு, முதலீடு செய்யுங்கள்.

கூட்டு வட்டி - என்ன சதவிகிதம்? அது முக்கியம். நிறைய வருடங்களுக்கு, அதிக கூட்டு வட்டி அளிக்கும் திட்டத்தைத் தேர்ந்தெடுங்கள். உதாரணமாக, 12.5% என வைத்துக்கொள்வோம். 8 வருடங்களில் என்னவாகும் என்று பாருங்கள்.

12 மாதங்கள், மாதம் 30,000 வீதம், வருடத்திற்கு 3,60,000 சேமிப்பு. வருடத்திற்கு 12.5% கூட்டு வட்டி.

முதல் வருடம், ஆரம்பத் தொகை 0, மாதம் 30,000, கூட்டு வட்டி 12.5%, 12 மாதங்களுக்கு.
இரண்டாம் வருடம், ஆரம்பத் தொகை 3,83,936.48, மாதம் 30,000, கூட்டு வட்டி 12.5%, 12 மாதங்களுக்கு.
இப்படியே கணக்குப் பார்க்கவும்.


8 வருட இறுதியில் உங்கள் கையில் 48 லட்சம் இருக்கும். அப்படியே அதனை 7 வருடங்களுக்கு முதலீடு செய்யுங்கள்.



ஆக, 15 வருடங்களில் நீங்கள் கோடீஸ்வரர் !!!

இப்போது, இப்பதிவின் தலைப்பைப் பாருங்கள்.

உங்களிடம் ஒரு கோடி உள்ளது. அப்பணத்தை, 10% சதவிகிதம் வட்டி அளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். அடுத்த 10 வருடங்களுக்கு, மாதம் 50,000 உறுதி.

10 வருடங்களில் நீங்கள் 1 கோடியிலிருந்து எவ்வளவு எடுத்திருப்பீர்கள் தெரியுமா? 60 லட்சம், அதாவது 60%. ஆக, 10 வருட முடிவில், உங்களிடம் மீதம் எவ்வளவு இருக்கும்?



ஆம்! 1.6 கோடி!!!

இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 8 வருடம் கைகட்டி சேமித்து, 7 வருடங்கள் பொறுமையாகக் காத்திருந்து, பின் வாழ்நாளை பொருளாதார சுதந்திரத்துடன் கழிக்கலாமா?

ஆலோசனைகள் வேண்டுமாஎங்களை அணுகவும்.  - 9962399924 / 9551373455 / dropletadvisory@gmail.com. 


Comments

Popular posts from this blog

முயலும் ஆமையும் !!!

அதனை அவன்கண் விடல் !!!

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி(EPF) - பொது வருங்கால வைப்பு நிதி(PPF)