Posts

Showing posts from September, 2018

பரஸ்பர நிதி(Mutual Fund) மூலம் பணம் ஈட்டுவது எப்படி?

Image
பெரும்பாலான வாசகர்கள் எங்களிடம் கேட்கும் ஒரே கேள்வி - பரஸ்பர நிதியின் மூலமாக , பங்குகளில் முதலீடு செய்வது எப்படி ?  எங்களுக்கு மகிழ்ச்சியாகவும் அதே சமயம் பதற்றமாகவும் இருக்கிறது . வாசகர்கள் நாங்கள் எழுதுவதைப் படித்து , இந்த அருமையான முதலீடு பற்றித் தெரிந்துகொள்ள முயற்சிப்பதில் மகிழ்ச்சி . அனைவருக்குமே தெளிவாகப் புரியும் வகையில் விளக்க முயற்சிப்பதில் பதற்றம் . பரஸ்பர நிதியின் வருமானத்தைப் பற்றிப் பார்க்கலாம் . பரஸ்பர நிதி பங்குகளோடு சம்பந்தப்பட்டது . அதனால் , அவை அளிக்கும் வருமானம் வரைபடத்தில் நேர்கோடாக , கீழ்க்காணும் வரைபடம் போல் இருக்கப்போவதில்லை . ஆனால் , இது போல இருக்கும் . இரண்டு விதங்களிலும் , 2021 ல் , 150 தான் . ஆனால் , தொகை 5 வருடங்களில் ஒரே சீராக உயருவதில்லை .   பரஸ்பர நிதியில் வருமானம் அதிகமாக இருக்கும் நாள் , குறையும் நாள் , மாற்றம் இல்லா நாள் என மாறி மாறி வரும் , ஆனால் , இறுதியில் அதிக வருமானம் வருவது இதில் தான் . எடுத்துக்காட்டுக்கள் போதும் . " சுந்தரம்

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி(EPF) - பொது வருங்கால வைப்பு நிதி(PPF)

  வேறொரு பதிவிட நினைத்த எங்களுக்கு , வருங்கால வைப்பு நிடி பற்றி சில சுவாரசியமான தகவல்கள் வந்தடைந்தன . அதனால் , இதனை எழுத உத்தேசித்தோம் . அடுத்த பதிவைப் புரிந்து கொள்வதற்கும் இது மிக உதவியாக இருக்கும் . இரண்டு வகை வருங்கால வைப்பு நிதிகள் உண்டு - ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி , பொது வருங்கால வைப்பு நிதி . இரண்டுமே நம் ஓய்வு காலங்களுக்கு உபயோகமான நீண்ட கால முதலீட்டுக் கருவிகள் . ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி (EPF) - பொது வருங்கால வைப்பு நிதி (PPF) - ஒப்பீடு : ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி( ஈ . பி . எஃப்) - சம்பள ஊழியர்களுக்கு இருக்கும் சேமிப்பு . ஊழியர் மற்றும் , வேலை நிறுவனம் இரண்டுமெ அடிப்படை ஊதியத்தில் 12% தொகையை சேமிக்கும் திட்டம் . இதனில் , வேலை நிறுவனம் அளிக்கும் 12% - ல் , 8.33% பென்சனுக்குப் போக , 3.67% மட்டுமே இந்த வைப்புநிதியில் தங்கும் . உங்கள் வேலையின் ஒரு அங்கம் இது . பொது வருங்கால வைப்பு நிதி( பி . பி . எஃப்) - மத்திய அரசு வழங்கும் முதலீட்டுத் திட்டம் . சுய தொழில் செய்ப