Posts

Showing posts from August, 2018

நீங்கள் வரி சேமிப்பாளரா அல்லது வரி முதலீட்டாளரா?

மார்ச் மாத சம்பளத்தைப் பார்த்து இதயம் நொறுங்கும் அனைவரும் கண்டிப்பாக இதனைப் படிக்கவும் !!! நானும் உங்களில் ஒருவன் தான் . சம்பளம் வாங்கும் வர்க்கத்தினரே வரிகளினால் பெரிதும் பாதிக்கப்படுகிறவர்கள் என நம்புகிறவன் . அதுவும் நாம் வரி செலுத்துவதில்லை , அரசு எடுத்துக் கொள்கிறது . பால் , அரிசி கோதுமை உள்ளிட்ட அனைத்து மளிகைப் பொருட்கள் , இருசக்கர வாகனம் , நான்கு சக்கர வாகனம் , துணிமணி , உணவு , கேளிக்கைகள் -   இவை அனைத்திற்கும் நாம் வரி செலுத்துகிறோம் , மாநகர வரி உட்பட . எல்லாத்திற்கும் மேல் , சம்பளம் வாங்கும் ஒருவனால் ஒரு " தொழிற்பண்பட்டவர் "(Professional) போல் வருமானத்தைக் கூறி , அதற்கு வரி கட்ட அனுமதி இல்லை ( நாம் தொழில் வரி கட்டியும் !!!). வேலை அளித்த நிறுவனமே வரியை எடுத்துக்கொள்ளும் . என்னே நியாயமற்ற , ஜனநாயகமற்ற முறை இது !. நீங்கள் எங்களிடம் கேட்பதில்லை - இது எவ்வாறு ஜனநாயகமாகும் ? இவ்வளவு செலுத்தியும் , சுத்தமான குடிநீர் , தரமான கல்வி , மருத்துவ வசதி , நல்ல சாலை , இவற்றில் ஏதாவது நமக்குக் கிடைக்கிறத