Posts

Showing posts from July, 2018

காலவரையறையற்ற சலுகை - வீட்டுக் கடன் 50% தள்ளுபடி!!!

சமீபத்தில் , ஒரு பிராண்டட் துணிக்கடையில் ஒரே கூட்டம் . சும்மாவா ? ஐம்பது சதவிகிதம் தள்ளுபடியாம் . ஒரே வாரத்தில் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன . பிராண்டட் துணிவகைகள் அனைவருக்கும் அத்தியாவசியமல்ல . சற்று யோசித்துப்பாருங்கள் . அத்தியாவசிய , அனைவருக்கும் கண்டிப்பாக தேவையான பொருள் 50 சதவிகித தள்ளுபடியில் கிடைத்தால் ? கூட்டம் எப்படி இருக்கும் ? அதனால் , இப்போது அனைவரும் ஏங்கும் " சொந்த வீடு " பற்றி இப்பொது சிந்திக்கலாம் . சில மனிதர்களைப் பார்க்கிறேன் . எந்தத் திட்டமும் இல்லாமல் ,   வீடு வாங்கி , ஆரம்ப காலம் முதலே மாத வட்டி கட்டத் திணறுவார்கள் . அளவான சம்பளம் ஆனால் வட்டியோ வரவுக்கு மிஞ்சி . சரி , இப்போது சரியான கணக்கைப் பார்ப்போம் . முக்கிய குறிப்புகள்: 1.        ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் சராசரி விலை 40 லட்சம் . 2.        வீடு வாங்குபவர் கையில் வைத்திருக்க வேண்டிய தொகை ~6 லட்சம் . வங்கியில் வீட்டுக் கடன் ~34 லட்சம் . வட்டி 8.65%. 15 வருடங்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் . மாதம

தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme)

                                 சட் சட் சட் ... கண்ணாடிச் சாளரங்களில் பட்டுத் தெறித்தன மதிய நேர மழைத்துளிகள். இந்த பன்னாட்டு நிறுவனத்திலும் சொர்க்கமொன்று உண்டு, 12ம் தளத்திலிருந்து வேலை செய்பவருக்கு. மின் தூக்கிக்குக் காத்திருந்த வேளையில் மழைத் துளிகளுக்குள் தொலைந்த நான் ஓர் உரையாடல் கேட்டுத் திரும்பினேன்.                                  அவருக்கு வயது நாற்பதுக்கு மேல் இருக்கும். தேசிய ஓய்வூதியத் திட்டம் பற்றி வெகு ஆர்வமாகப் பேசிக் கொண்டிருந்தார். தனது ஓய்வூதிய வாழ்க்கையை அத்திட்டம் கவனித்துக் கொள்ளுமென்ற நம்பிக்கை தெரித்தது அவர் பேச்சில். "இந்தத் தலைமுறைப் பிள்ளைகள் நம்மை கவனித்துக் கொள்வார்களா என்ன? அதனால் இந்தத் திட்டத்தில் இணையப் போகிறேன்" என அவர் கூறியதைக் கேட்டதும் எனக்கும் அந்த ஆர்வம் தொற்றிக் கொண்டது. வேகமாக உணவருந்தி, நிகழ்கால பிரம்மன் கூகுளிடம் ஓடினேன், தேசிய ஓய்வூதியத் திட்டம் பற்றித் தெரிந்துகொள்ள.                                  தேசிய ஓய்வூதிய திட்டம் பற்றியும், எவ்வாறு இது ஒரு முதலீடோ அல்லது வருமான வரிச் சலுகை பெறும் கருவியோ ஆகிறது?(அப்படித் தானே வ