Posts

Showing posts from October, 2018

முயலும் ஆமையும் !!!

Image
முயலும்   ஆமையும் முயல் ஆமை கதை தெரியும் உங்களுக்கு . இங்கே சிலச் சின்ன மாற்றங்களுடன் !! முயலும் ஆமையும் நண்பர்கள்தாம் .. எதிரும் புதிருமான நண்பர்கள் . இருவரும் முதல் சம்பளம் வாங்கியதும் , மாதம் 10,000 சேமிக்கத் துவங்கினர் . இருவரும் எதிர் துருவங்கள் அல்லவா ? முயல் பங்குச் சந்தையை த் தேர்ந்தெடுத்தது . மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தது . ஆமையோ , நிலையான வைப்பு நிதியில் ( பிக்ஸட் டெபாசிட் ), பொது வருங்கால வைப்பு நிதியில் ( பி . பி . எஃப் ) முதலீடு செய்தது . எவரின் ஏளனத்தாலும் கலக்கமடையவில்லை ஆமை . புன்னகையோடு தலை திருப்பி , பி . பி . எஃப் - ல் பணம் போட்டது . முயல் பங்குச் சந்தையை கவனிப்பதில் முனைப்பு காட்டியது . வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தது . ப்ளூசிப் எனும் அதிக ஆபத்தில்லா பங்குகள் வாங்குவதில் ஈடுபட்டது . ஆமை ஒவ்வொரு வருடமும் மாத சேமிப்புத் தொகையை 10% உயர்த்தியது . பத்து வருடங்கள் கழிந்தன . முயல் 15% கூட்டு இலாபாமாக 28 லட்சங்கள் வைத்திருந்தது . " அருமை .

அதனை அவன்கண் விடல் !!!

Image
அதனை அவன்கண் விடல் ஒரு சனிக்கிழமை . நானும் தரமும் ( தரம் - நண்பன் , முதலீட்டு ஆலோசனையில் , என் கூட்டாளி ), நிதிகள் பற்றிய ஒரு வகுப்பில் அமர்ந்திருந்தோம் . சுற்றி நோக்கினால் , அனைவருமே 45+. முதலீட்டின் காலம் கடந்த பின் ஏன் இங்கே என நினைத்துக்கொண்டேன் . பாடத்தின் சுவாரசியத்தில் உணவை மறந்த வேளையில் இடைவேளை அளிக்கப்பட்டது . அவருக்கு 50 வயது இருக்கலாம் . இவரையொத்த சிலருடன் எங்கள் பின் வந்துகொண்டிருந்தார் . சரீரத்திற்குதான் 50 வயது என்று கூறினேன் . அனைவருமே ' இளம் முதலீட்டாளர்கள் '. நல்லவேளை , எங்களிருவருக்கும் இருபதுகளிலேயே இதில் ஆர்வம் வந்ததால் நல்லாதாயிற்று . பல்வேறு தோல்விகளால் இந்த் 7 வருடங்களில் நிறையவே கற்றுக் கொண்டோம் , நல்ல முதலீடுகள் செய்கிறோம் . தற்போது , கற்ற அனைத்தையும் தங்களுடன் பகிர்ந்துகொள்ளும் முயற்சியில் உள்ளோம் . இப்போது , அந்த மனிதரைப் பார்க்கலாம் . அவருடைய அலைபேசி ஒலித்தது . பேசுவதிலிருந்து , அவர் ஒரு காப்பீட்டு முகவர் எனத் தெரிய வந்தது . அவர் வாடிக்கையாளரிடம் பெரிய சொற்பொழிவு