ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி(EPF) - பொது வருங்கால வைப்பு நிதி(PPF)





 வேறொரு பதிவிட நினைத்த எங்களுக்கு, வருங்கால வைப்பு நிடி பற்றி சில சுவாரசியமான தகவல்கள் வந்தடைந்தன. அதனால், இதனை எழுத உத்தேசித்தோம். அடுத்த பதிவைப் புரிந்து கொள்வதற்கும் இது மிக உதவியாக இருக்கும்.
இரண்டு வகை வருங்கால வைப்பு நிதிகள் உண்டு - ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி, பொது வருங்கால வைப்பு நிதி.இரண்டுமே நம் ஓய்வு காலங்களுக்கு உபயோகமான நீண்ட கால முதலீட்டுக் கருவிகள்.

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி(EPF) - பொது வருங்கால வைப்பு நிதி(PPF) - ஒப்பீடு:

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி(.பி.எஃப்) - சம்பள ஊழியர்களுக்கு இருக்கும் சேமிப்பு. ஊழியர் மற்றும், வேலை நிறுவனம் இரண்டுமெ அடிப்படை ஊதியத்தில் 12% தொகையை சேமிக்கும் திட்டம். இதனில், வேலை நிறுவனம் அளிக்கும் 12% - ல், 8.33% பென்சனுக்குப் போக, 3.67% மட்டுமே இந்த வைப்புநிதியில் தங்கும்.உங்கள் வேலையின் ஒரு அங்கம் இது.

பொது வருங்கால வைப்பு நிதி(பி.பி.எஃப்) - மத்திய அரசு வழங்கும் முதலீட்டுத் திட்டம்.சுய தொழில் செய்பவர் மற்றும் அனைவருக்கும், ஓய்வு காலங்களில் உதவும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. எந்த இந்தியனும், இந்தத் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். வருடத்திற்கு 500 முதல் 1.5 லட்சம் வரை சேமித்துக் கொள்ளலாம்.

இலாபம்:
.பி.எஃப்  வருமான விகிதம் - 8.65%
பி.பி.எஃப்  வருமான விகிதம் - 7.8%(ஜூலை 2017 முதல்)
இந்த விகிதங்கள் 2017-ல். அரசு ஒவ்வொரு வருடமும் இதனை மாற்றிக் கொண்டே இருக்கும். கடைசியாக, ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியின் விகிதம் 8.8-ல் இருந்து 8.65 ஆக குறைக்கப் பட்டது.

பணத்தின் வைப்புக் காலம்:
.பி.எஃப் - வேலையிலிருந்து ஓய்வு பெறும் போது கையில் கிடைக்கும். ஒரு நிறுவனத்திலிருந்து, வேறு நிறுவனத்திற்கு மாறும் போது, இதனையும் மாற்றிக் கொள்ளலாம்.
பி.பி.எஃப் - 15 வருடங்களுக்கு எடுக்க முடியாது. 16வது வருடத்திலிருந்து 100% வரை எடுத்துக்கொள்ளலாம்.


வரி விலக்கு:

.பி.எஃப் - 80C வகையில் வரி விலக்கு உண்டு. ஒரே ஒரு விதி - ஊழியர் குறைந்தது 5 வருடங்கள் பணியில் இருந்திருக்க வேண்டும்.
 பி.பி.எஃப் - 80C வகையில் வரி விலக்கு உண்டு. அதோடு, கடைசியில் கிடைக்கும் தொகை அனைத்திற்கும் வரி விலக்கு உண்டு.

பணம் திரும்பப் பெறுதல்:

.பி.எஃப் - தனிப்பட்டத் தேவைகளுக்காக, விண்ணப்பமிட்டு பணம் எடுத்துக்கொள்ளலாம். இதன் மேல் கடனும் எடுக்கலாம்.
பி.பி.எஃப் - 7ம் வருடம் முதல், பகுதி பணம் எடுத்துக்கொள்ளலாம்.

இரண்டில் எது உயர்ந்தது?

மேற்கூறியவற்றைப் படிக்கும்போதே புரிந்திருக்கும் - ஈ.பி.எஃப் தான் பதில் என்று.

1.       நீங்கள் மட்டுமல்லாது வேலை நிறுவனமும் இதில் பணம் சேர்க்கும்.
2.       தனிப்பட்ட தேவைகளுக்காக பணம் எடுக்கும் வசதி உண்டு. பி.பி.எஃப் போல 7 வருடங்கள் காத்திருக்க வேண்டியதில்லை.
3.       வட்டி விகிதமும் ஈ.பி.எஃப்-ல் அதிகம் பி.பி.எஃப் உடன் ஒப்பிடும்போது.

ஈ.பி.எஃப் நமது சம்பளகணக்கோடு சேர்ந்தது. தனியாக நாம் ஏதும் செய்யத் தேவையில்லை. அது இருக்க, அதே போன்று இருக்கும் வேறொரு வருங்கால வைப்பு நிதி(பொது வருங்கால வைப்பு நிதி) அவசியமில்லை.

உணவில் பல வகைகளை நீங்கள் எதிர்பார்ப்பது போல, முதலீட்டிலும் வகைகளைத் தேடுங்கள்.வருமான வரி விலக்கிற்கு வேறு வகையான முதலீடுகளைத் தேர்ந்தெடுங்கள்.


Comments

  1. அவசியமான பதிவு. மிக உபயோகமாக இருந்தது. பதிவிட்டமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முயலும் ஆமையும் !!!

அதனை அவன்கண் விடல் !!!