நீங்கள் வரி சேமிப்பாளரா அல்லது வரி முதலீட்டாளரா?

மார்ச் மாத சம்பளத்தைப் பார்த்து இதயம் நொறுங்கும் அனைவரும் கண்டிப்பாக இதனைப் படிக்கவும்!!!

நானும் உங்களில் ஒருவன் தான்.சம்பளம் வாங்கும் வர்க்கத்தினரே வரிகளினால் பெரிதும் பாதிக்கப்படுகிறவர்கள் என நம்புகிறவன். அதுவும் நாம் வரி செலுத்துவதில்லை, அரசு எடுத்துக் கொள்கிறது. பால், அரிசி கோதுமை உள்ளிட்ட அனைத்து மளிகைப் பொருட்கள், இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், துணிமணி, உணவு, கேளிக்கைகள் -  இவை அனைத்திற்கும் நாம் வரி செலுத்துகிறோம், மாநகர வரி உட்பட. எல்லாத்திற்கும் மேல், சம்பளம் வாங்கும் ஒருவனால் ஒரு "தொழிற்பண்பட்டவர்"(Professional) போல் வருமானத்தைக் கூறி, அதற்கு வரி கட்ட அனுமதி இல்லை(நாம் தொழில் வரி கட்டியும் !!!). வேலை அளித்த நிறுவனமே வரியை எடுத்துக்கொள்ளும். என்னே நியாயமற்ற, ஜனநாயகமற்ற முறை இது!. நீங்கள் எங்களிடம் கேட்பதில்லை - இது எவ்வாறு ஜனநாயகமாகும்? இவ்வளவு செலுத்தியும், சுத்தமான குடிநீர், தரமான கல்வி, மருத்துவ வசதி, நல்ல சாலை, இவற்றில் ஏதாவது நமக்குக் கிடைக்கிறதா? ஒன்று கூட இல்லை. அனைத்தும் ஊழல் செய்பவரின் சட்டைப் பையில்.

ஊழலுக்கு எதிராக நாம் போராடலாம் என்று கூறியதற்கு ஒரு நண்பன் சொன்னான், "பார்த்து.. அதற்கும் ஊழல் வரி ஒன்று பிடுங்கி, “Anti-Indian” என முத்திரை குத்திவிடப் போகிறார்களென்று. அதனால், ஒரு நல்ல, உபயோகமான பதிவு ஒன்று எழுதலாம் என்று நினைக்கிறேன்.

சரி, நம் பணத்தை எடுத்துவிட்டார்கள். அதோடு பிரச்சனை முடிந்ததா? இல்லை.சில சமயம் நாம் பணத்தை சேமிப்பதற்கான எளிதான, அருமையான வழிகளைக் கையாளாமல் இருப்பதும் ஒரு பிரச்சனை. அப்படி ஒரு வழி 80c.

கீழ்கண்டவர்கள் தவிர அனைவரும் தொடர்ந்து படிக்கவும் -

1. உங்கள் ஆண்டு வருமானம் 6 லட்சத்திற்கும் குறைவா? (நீங்கள் செலுத்தும் வரி மிக மிகச் சொற்பம். எனவே, திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். நிறைய வருமானம் ஈட்டி, பின்பு, இந்தப் பதிவை வாசியுங்கள்.)
2. வீட்டுக் கடன் உள்ளதா? (டயாலிஸிஸ் பண்ணுபவர் இரத்த தானம் செய்ய முடியுமோ ?? :P)
3. "நாட்டுப்பற்று மிக்கவன் நான். வருமான வரி செலுத்துயேயாவேன்" என்று கூறுபவரா?
4. செல்வந்தனாகும் ஆசை அற்றவரா?

மற்றவர்கள் தொடர்ந்து வாசிக்கவும்.

80C என்பது, சில முதலீடுகள் செய்வதன் மூலம், அந்த பணத்திற்கு வரிச் சலுகை அளிக்கும். எவையெல்லாம்?

எல் சி-க்குக் கட்டும் பணம், 5 வருட சேமிப்புப் பத்திரம்(தபால் நிலையம் மற்றும் வங்கிகளில் போடப் படும் "வைப்பு நிதி", வீட்டுக்கடனில் செலுத்தும் முதல், ஓய்வூதிய நிதி, வருங்கால வைப்பு நிதி, மருத்துவக் காப்பீட்டிற்கு செலுத்தும் தொகை.

இதில் ஓய்வூதிய நிதி, வருங்கால வைப்பு நிதி இவற்றை வேலை செய்யும் நிறுவனம் பார்த்துக் கொள்ளும். வீட்டுக்கடன், மருத்துவக் காப்பீடு இவை தேவைக்கேற்ப மாறுபவை.
மீதமுள்ளவை

1. எல் சி காப்பீட்டுத் திட்டங்கள்.
2. வரி சேமிப்புப் பத்திரங்கள்.
3. தேசிய ஓய்வூதியத் திட்டம்.
4. பங்குகளுடன் இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம்(ELSS - Equity Linked Savings Scheme)
இப்போது ஒரு விவரமான விவேகமான ஒரு ஒப்பீட்டைப் பார்க்கலாம்.

ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை
எல் சி காப்பீட்டுத் திட்டங்கள்
பங்குகளுடன் இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம்
தேசிய ஓய்வூதியத் திட்டம்
வரி சேமிப்புப் பத்திரங்கள்
பொது வருங்கால வைப்பு நிதி

வீட்டுக்கடன்
பணத்தின் வைப்புக் காலம்
8 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை
3 வருடங்கள்
வாழ்க்கை முழுவதும்  - எங்கள் முந்தைய பதிவைப் படிக்கவும். தேசிய ஓய்வூதியத் திட்டம்.
5 வருடங்கள்
15 வருடங்கள்
விவாதம் தேவையே இல்லை. எங்கள் முந்தைய பதிவை வாசிக்கவும்.


இலாபம்
~7%
சந்தை நிலவரம் பொறுத்தது. சராசரியாக 16%
சந்தை நிலவரம் பொறுத்தது. சராசரியாக 9%
7.25%
7.80%
செல்வத்தை உருவாக்குவதா?
இல்லை. வரும் இலாபம், பணவீக்கத்தைக் கூட சரிக்கட்ட இயலாதது
உண்டு. பணவீக்கத்தை சமாளிப்பதற்குத் தேவையானதை விட அதிகம். நீண்டகால செல்வத்தை உருவாக்க வழி செய்யும்
இல்லை. வரும் இலாபம், பணவீக்கத்தைக் கூட சரிக்கட்ட இயலாதது
இல்லை. வரும் இலாபம், பணவீக்கத்தைக் கூட சரிக்கட்ட இயலாதது
இல்லை. வரும் இலாபம், பணவீக்கத்தைக் கூட சரிக்கட்ட இயலாதது
வரிச் சலுகை?
வரிச் சலுகை உண்டு(விதிகளுக்கு உட்பட்டது!)
வரி செலுத்தத் தேவையில்லை.
வரி செலுத்தவேண்டும்.
வட்டிக்கு மட்டும் வரி செலுத்த வேண்டும்.
வரி செலுத்தத் தேவையில்லை.
ஆபத்து
ஆபத்து இல்லை என கருதிக்கொள்ளப்படுவது.
சந்தை நிலவரம் பொறுத்து
அரசு அவ்வப்போது மாற்றும் விதிமுறைகளைப் பொறுத்து
ஆபத்து இல்லை(1 லட்சம் வரை)
ஆபத்து இல்லை

விவேகமுள்ள ஒருவன் கீழ்கண்டவற்றை ஆராய்ந்துத் தேர்ந்தெடுப்பான்.

குறைவான வைப்புக் காலம்
அதிக இலாபம்
வரிச் சலுகை உள்ளது
செல்வம் ஈட்ட வழி செய்வது

வரி சேமிப்பாளராக இருப்பவருக்கு, வரி முதலீட்டாளராக மாறுவதற்கு இந்தப் பதிவு வழிகாட்டும் என நம்புகிறோம்.

குறிப்பு - நமது நாடு, வேகமாக வளர்ச்சியடையும் பொருளாதாரம் கொண்டது. அமெரிக்கா, சீனாவிற்குச் சமமான நிலை அடையும் என நம்பப்படுகிறது. நாம், இந்த வளர்ச்சியில் பங்கெடுத்து பயனடைந்தால் மட்டுமே இந்த வளர்ச்சிக்கு அர்த்தமுண்டு. இதற்கு பங்குகளே சரியான வழி, பங்கெடுக்கவும், பயனடையவும்!!


அதற்கான ஆலோசனைகள் வேண்டுமாஎங்களை அணுகவும்.  - 861 017 2018/824 836 9621.


Comments

Popular posts from this blog

முயலும் ஆமையும் !!!

மாதம் 50 ஆயிரம் சம்பாதியுங்கள் - வாழ்க்கை முழுதும் !!!

ஆரோக்கியம் - உடலுக்கு மட்டும் தானா?