ஆரோக்கியம் - உடலுக்கு மட்டும் தானா?


Click here to read in English

ஆரோக்கியம் - உடலுக்கு மட்டும் தானா?
உங்கள் பணத்திற்கு இல்லையா?

1. எவ்வளவு சீக்கிரம் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுகிறோமோ, அவ்வளவு நல்லது. நீங்கள் பார்க்கில் ஓடினாலும் சரி, மாரத்தான் ஓடினாலும் சரி.
எவ்வளவு சீக்கிரம் சேமிப்பு துவங்குகிறதோ, அவ்வளவு நல்லது. அது வெறும் 500 ரூபாயாக இருந்தாலும்!

2. அதிகமாக உண்ணவேண்டாம். கெட்ட கொழுப்பு வேண்டவே வேண்டாம்.
கடன் கூடவே கூடாது.

3. உடற்பயிற்சி ஆரம்பிக்கிறீர்களா? சிறிது சிறிதாக அதிகரியுங்கள், தங்கள் முழு வாழ்க்கை ஆரோக்கியத்தை மனதில் கொண்டு.
சேமிக்கும் போது, அதிக கால பலனைக் கருத்தில் கொள்ளவும். 

4. உடற்பயிற்சி தொடர்ந்து செய்யவும். விட்டு விட்டு செய்வதில் பலனில்லை.
சேமிப்போ முதலீடோ, தொடர்ந்து செய்யுங்கள்.

5. 6 பேக் ஒரு மாதத்தில் வராது.
கோடிச் சொத்தும் ஒரு மாதத்தில் வராது. தொடர்ந்து முயற்சித்தால் மட்டுமெ பலன். பொறுமை அவசியம்.

6. குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை உடல் ஆரோக்கியத்தைப் பரிசோதித்துக் கொள்வது நன்று.
குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை உங்கள் சேமிப்பும் முதலீடும், சரியான குறிக்கோளை நோக்கித் தான் நகர்கிறதா எனப் பார்த்துக்கொள்ளவும்.

7. வித்தியாசங்கள் அவசியம். ஒரே உணவை 3 வேளை எல்லா நாளும் உண்ண முடியாது.
வாழ்நாள் முழுவதும் ஒரே இடத்தில் சேமிப்போ முதலீடோ செய்தால் ஒரு பலனுமில்லை.

8. ஆபத்துகள் வரும், நாம் என்ன செய்கிறோம் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளாமல் செய்வதால். உடற்பயிற்சிக்கு ஆலோசகர் தேவை.
முதலீடு, சேமிப்பிற்கும் தகுந்த ஆலோசகர் தேவை.

9. ஜங்க் உணவுகள் சாப்பிடும்போது ருசியாகத் தான் இருக்கும். ஆனால் ஆரோக்கியம் காலி.
லோன் (கடன்) வாங்கி, சொத்து சேர்க்கும் போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் உங்கள் நிதி ஆரோக்கியம்???

10. மற்றவரை விடச் சிறந்தவராக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.நீங்கள் செய்யும் செயல்களில் ஒழுங்கு இருந்தாலே போதும். உடற்பயிற்சி நன்று என அனைவருக்கும் தெரியும், ஆனால் செய்பவர்கள் வெகு சிலரே.
சேமிப்பும் முதலீடும் தேவை என அனைவருக்கும் தெரியும், ஆனால் செய்பவர்கள் வெகு சிலரே. அறிவு 20% என்றால், செய்முறை 80% இருக்கட்டும்.

11. வரும் முன் காப்பது, சாலச் சிறந்தது. ஆரோக்கியத்தைப் பேணிக் காக்காமல், மருத்துவத்திற்குச் செலவழிக்கலாமா?
25%+ ரிட்டர்ன்ஸ் போன்ற அகலக்கால் வழிகளைத் தவிர்க்கவும். இலாபம் சம்பாதிப்பதற்கு முன், சேமித்த/முதலீடு செய்த பணத்தைக் காப்பது மிக அவசியம்.

Click here to read in English

Comments

Popular posts from this blog

முயலும் ஆமையும் !!!

அதனை அவன்கண் விடல் !!!

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி(EPF) - பொது வருங்கால வைப்பு நிதி(PPF)