காலவரையறையற்ற சலுகை - வீட்டுக் கடன் 50% தள்ளுபடி!!!
சமீபத்தில், ஒரு பிராண்டட் துணிக்கடையில் ஒரே கூட்டம். சும்மாவா? ஐம்பது சதவிகிதம் தள்ளுபடியாம்.ஒரே வாரத்தில் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. பிராண்டட் துணிவகைகள் அனைவருக்கும் அத்தியாவசியமல்ல. சற்று யோசித்துப்பாருங்கள். அத்தியாவசிய, அனைவருக்கும் கண்டிப்பாக தேவையான பொருள் 50 சதவிகித தள்ளுபடியில் கிடைத்தால்? கூட்டம் எப்படி இருக்கும்?
அதனால், இப்போது அனைவரும் ஏங்கும் "சொந்த வீடு" பற்றி இப்பொது சிந்திக்கலாம். சில மனிதர்களைப் பார்க்கிறேன். எந்தத் திட்டமும் இல்லாமல்,
வீடு வாங்கி, ஆரம்ப காலம் முதலே மாத வட்டி கட்டத் திணறுவார்கள். அளவான சம்பளம் ஆனால் வட்டியோ வரவுக்கு மிஞ்சி.
சரி,
இப்போது சரியான கணக்கைப் பார்ப்போம்.
முக்கிய குறிப்புகள்:
1.
ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் சராசரி விலை 40 லட்சம்.
2.
வீடு வாங்குபவர் கையில் வைத்திருக்க வேண்டிய தொகை ~6 லட்சம்.
வங்கியில் வீட்டுக் கடன் ~34 லட்சம்.
வட்டி 8.65%.
15 வருடங்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
மாதம் செலுத்த வேண்டிய தொகை 33780. ~34000
15 வருடங்களின் இறுதியில் வீடு வாங்கியவர்(இப்போது தான் வீட்டின் சொந்தக்காரர்) 61 லட்சம் செலுத்தியிருப்பார் வங்கிக்கு. முதலுக்காக 34 லட்சம். வட்டி 26.8 லட்சம்.
3.
வங்கியில் செலுத்தும் வட்டி மட்டுமே 26.8 லட்சம்.
இதில் மிக முக்கியம் என்னவென்றால், முதல் ஐந்து வருடங்களுக்குள், 50 சதவிகித வட்டி வங்கிக்கு செலுத்தப்பட்டுவிடும். அதாவது, முதல் 5 வருடங்களில், 13.3 லட்சம் வட்டி(2.9+2.8+2.7+2.5+2.4).
இதில் தான் வீடு வாங்குபவர் சாமர்த்தியமாக நடந்து கொள்ள வேண்டும். நினைத்ததும் வீடு வாங்காமல், 5 வருடங்களுக்கு பணத்தை முதலீடு செய்து 15% கூட்டு லாபத்தினால், அந்த 13.3 லட்சம் வட்டிப் பணத்தை சேமிக்கவேண்டும்(கவலை வேண்டாம். உதவி செய்ய நாங்கள் இருக்கிறோம்). 13.3 லட்சம்/5 வருடங்கள்/12 மாதங்கள் => மாதம் 22000. மீதமுள்ள தொகை வாடகைக்கு அளிக்கலாம்(12000 அல்லது அதற்கும் கம்மியாக, வாடகை வீடுகள் நிறைய உள்ளன).
5 வருடங்களில், மாதம் சேமிக்கும் 22000, 19.2 லட்சமாக உயரும்.வீடு வாங்கும் போது, முதலில் கொடுக்கும் 6 லட்சத்தை முதலீடு செய்த்தில், அது 12 லட்சமாக உயர்ந்திருக்கும்.ஆக உங்கள் கையில் 31 லட்சம் இருக்கும்.
5 வருடங்களில் வீட்டின் விலை அப்படியே இருக்குமா என்ன? கண்டிப்பாக உயர்ந்திருக்கும். 7% உயர்வு என வைத்துக்கொள்ளலாம். வீட்டின் விலை இப்போது 56 லட்சம். சேமித்துள்ளது 31 லட்சம். 25 லட்சம் கடன் வாங்கி, முன் சொன்னது போல் 34000 மாத வட்டி கட்ட முனைந்தால்? இந்த 5 வருடங்களில், கண்டிப்பாக சம்பளமும் உயர்ந்திருக்கும். எனவே, 25% கூடுதலாகவே செலுத்தலாம் - 42500. 25 லட்சம் கடனை 6.5 வருடங்களில் முழுவதுமாக திருப்பி செலுத்திவிடலாம். 8 லட்சம் மட்டுமே வட்டித் தொகையாக இருக்கும்.
4.
இப்போது வீடு வாங்குபவர் 8 லட்சம் மட்டுமே வட்டி செலுத்தியுள்ளார். 5 வருடங்களுக்கு முன் என்றால், 36 லட்சம் வட்டி. 28 லட்சம் சேமிப்பு.
5.
11.5 வருடங்களில் வீட்டின் சொந்தக்காரர் ஆகிறார். 5 வருடங்களுக்கு முன் என்றால், 15 வருடங்கள். தற்போது 3.5 வருடங்களுக்கு முன்பே.
இப்போது, இன்னும் கடன் செலுத்துவதாக நினைத்துக் கொண்டு, அந்த 43000 தொகையை மாதமாதம் முதலீடு செய்தால், 3.5 வருட முடிவில், 23 லட்சம் இருக்கும். இதனை செலவழிக்காமல், அப்படியே முதலீட்டில் வைத்திருக்க வேண்டும். 20 வருடங்களில் இது 3.7 கோடி. இவ்வாறு தெளிவாகத் திட்டமிட்டால், ஓய்வு காலத்தில் நிம்மதியாக சொந்த வீட்டில் வாழலாம், எந்த நிதி நெருக்கடியும் இல்லாமல்.
என்னுடைய தனிப்பட்ட கருத்து யாதெனில், நமக்கு சொந்தமாக வீடு அவசியம். இதுவரை திட்டமிடவில்லையெனில் இப்போதே திட்டமிட ஆரம்பிக்கவும். இந்தநொடி போல் மகத்துவம் வாய்ந்தது வேறு ஏதும் இல்லை.
குறிப்பு: வீடு வாங்குபவர் பணத்தை “Balanced Fund” – அதாவது,
ஆபத்து இல்லாத அதே சமயம், சராசரி இலாபம் தரும் பரஸ்பர நிதியில் (Mutual fund) முதலீடு செய்து, 5 வருடங்களில் 16% லாபம் பெற்றதாகக் கருதப்படுகிறது.
Comments
Post a Comment