முயலும் ஆமையும் !!!



முயலும் ஆமையும்

முயல் ஆமை கதை தெரியும் உங்களுக்கு. இங்கே சிலச் சின்ன மாற்றங்களுடன் !! முயலும் ஆமையும் நண்பர்கள்தாம்.. எதிரும் புதிருமான நண்பர்கள். இருவரும் முதல் சம்பளம் வாங்கியதும், மாதம் 10,000 சேமிக்கத் துவங்கினர். இருவரும் எதிர் துருவங்கள் அல்லவா? முயல் பங்குச் சந்தையைத் தேர்ந்தெடுத்தது. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தது.ஆமையோ, நிலையான வைப்பு நிதியில்(பிக்ஸட் டெபாசிட்), பொது வருங்கால வைப்பு நிதியில்(பி.பி.எஃப்) முதலீடு செய்தது.

எவரின் ஏளனத்தாலும் கலக்கமடையவில்லை ஆமை. புன்னகையோடு தலை திருப்பி, பி.பி.எஃப்-ல் பணம் போட்டது.
முயல் பங்குச் சந்தையை கவனிப்பதில் முனைப்பு காட்டியது.வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தது. ப்ளூசிப் எனும் அதிக ஆபத்தில்லா பங்குகள் வாங்குவதில் ஈடுபட்டது. ஆமை ஒவ்வொரு வருடமும் மாத சேமிப்புத் தொகையை 10% உயர்த்தியது.
பத்து வருடங்கள் கழிந்தன.

முயல் 15% கூட்டு இலாபாமாக 28 லட்சங்கள் வைத்திருந்தது. "அருமை. நான் சற்று ஓய்வெடுக்கலாம். அப்பாடா!!! விடுமுறைக்குச் செல்லலாம். பல நாளாக வாங்க ஆசை கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் வாங்கலாம்..", என நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

ஆமை பார்த்தது. "இது முட்டாள்தனம். இப்போது ஓய்வெடுக்கிறான். முதலீட்டை நிறுத்தி சரியப் போகிறான். நான் அப்படி இல்லை. எப்போதும் போல் முதலீட்டில் ஈடுபடுவேன். " என மார்தட்டியது. ஆடம்பர செலவுகள் சிலவற்றைக் குறைத்துக்கொண்டது.

முயல், வாழ்க்கையை ரசித்து ரசித்து வாழ்ந்தது. முதல் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, முதலீடு செய்யவே இல்லை.



ஓய்வுக்காலம் நெருங்கியது. முயலும் ஆமையும் சந்தித்துக் கொண்டன. முயல் தன் பயணங்கள் பற்றியும், வீடு புதுப்பித்தல் திட்டம் பற்றியும் பெருமையாக பேசியது. முயலின் கையிருப்புத் தொகை அறிந்து ஆச்சரியப்பட்டது ஆமை.

"இது கிட்டத்தட்ட நான் சேமித்துள்ள தொகை அல்லவா? நான் முதலீடு செய்து கொண்டே இருந்தேன். முதலீட்டுத் தொகையை அதிகரித்துக்கொண்டே இருந்தேன். நீயோ பாதியில் நிறுத்திவிட்டாய். நான் பல ஆசைகளை, செலவுகளைக் கட்டுப்படுத்தினேன். நீயோ ரசித்து வாழ்ந்தாய்." எனப் புலம்பியது.

"நான் சரியான திட்டங்களில் முதலீடு செய்தேன். எனது செல்வம் 15% வளர்ச்சியில் உயர்ந்தது. உனது 8%", முயல் அமைதியாக உரைத்தது.

கதை கூறும் நீதி - முதலீடு செய்துகொண்டே இருப்பது நல்லது தான். ஆனால் அது சரியான திட்டங்களின் மேல் இருக்க வேண்டும். பிக்ஸட் டெபாசிட், பி.பி.எஃப் போன்றவற்றால் எப்போதும் ஓய்வுக்கால சேமிப்பின் பந்தயத்தில் வாகை சூட இயலாது.

சிந்தித்து செயல்படுங்கள். நிறைய சேமியுங்கள், முதலீடு செய்துகொண்டே இருங்கள்.

நன்றி - எகனாமிக் டைம்ஸ்

ஆலோசனைகள் வேண்டுமாஎங்களை அணுகவும்.  - 861 017 2018/824 836 9621.

மியூச்சிவல் ஃபண்ட் பங்குச்சந்தையின் அபாயங்களுக்கு உட்பட்டது.




Comments

Popular posts from this blog

மாதம் 50 ஆயிரம் சம்பாதியுங்கள் - வாழ்க்கை முழுதும் !!!

ஆரோக்கியம் - உடலுக்கு மட்டும் தானா?