அதனை அவன்கண் விடல் !!!



அதனை அவன்கண் விடல்

ஒரு சனிக்கிழமை. நானும் தரமும்(தரம் - நண்பன், முதலீட்டு ஆலோசனையில், என் கூட்டாளி), நிதிகள் பற்றிய ஒரு வகுப்பில் அமர்ந்திருந்தோம். சுற்றி நோக்கினால், அனைவருமே 45+. முதலீட்டின் காலம் கடந்த பின் ஏன் இங்கே என நினைத்துக்கொண்டேன். பாடத்தின் சுவாரசியத்தில் உணவை மறந்த வேளையில் இடைவேளை அளிக்கப்பட்டது.

அவருக்கு 50 வயது இருக்கலாம்.இவரையொத்த சிலருடன் எங்கள் பின் வந்துகொண்டிருந்தார். சரீரத்திற்குதான் 50 வயது என்று கூறினேன். அனைவருமே 'இளம் முதலீட்டாளர்கள்'.நல்லவேளை, எங்களிருவருக்கும் இருபதுகளிலேயே இதில் ஆர்வம் வந்ததால் நல்லாதாயிற்று. பல்வேறு தோல்விகளால் இந்த் 7 வருடங்களில் நிறையவே கற்றுக் கொண்டோம், நல்ல முதலீடுகள் செய்கிறோம். தற்போது, கற்ற அனைத்தையும் தங்களுடன் பகிர்ந்துகொள்ளும் முயற்சியில் உள்ளோம்.

இப்போது, அந்த மனிதரைப் பார்க்கலாம்.

அவருடைய அலைபேசி ஒலித்தது.பேசுவதிலிருந்து, அவர் ஒரு காப்பீட்டு முகவர் எனத் தெரிய வந்தது. அவர் வாடிக்கையாளரிடம் பெரிய சொற்பொழிவு ஆற்றினார் பாருங்களேன்! முதலீடு பற்றிப் பேசி, மகிழ்ச்சியில் இருந்த எங்களுக்கு, நெஞ்சுவலியே வந்துவிட்டது. "காப்பீடு என்பது சிறந்த முதலீடு. அருமையான லாபம் கிடைக்கும்" என்பதே அவை உரையின் சாராம்சம்.

தமிழில் சொல்லும் போது காப்பீடு-முதலீடு-எவ்வாறு ஒன்றாக்கும்? என நமக்குத் தோன்றுகிறது. ஆனால் ஆங்கிலத்தில்? இன்சூரஸ்-இன்வெஸ்ட்மண்ட்-மக்கள் குழம்பிவிடுகின்றனர்.

காப்பீடு(இன்சூரன்ஸ்) - தங்களை ஆபத்துக் காலங்களில்(பணம் நஷ்டமான காலத்தில்) காப்பது. இதற்கும் முதலீட்டிற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

அதனால், இவர்களின் காப்பீடுகள் பற்றி ஆராய ஆரம்பித்தோம். எல்லாவற்றிலும் மிகப் பிரபலமாக இருப்பது, எல்..சி யின் "ஜீவன் ஆனந்த்".


இந்தத் திட்டம் முடியும் வரை நீங்கள் உயிரோடு இருந்தால், தங்களுக்குக் கிடைக்கப் போவது 6%. தற்போதைய பொருளாதார நிலைமையில் பணவீக்கம் 6%. ஆக தங்களுக்குக் கிடைக்கப் போவது ஒன்றுமில்லை. பணவீக்கத்தைச் சமாளிக்கும் இலாபம் ஈட்டாத திட்டம் எவ்வாறு முதலீடு ஆகும்? இந்தப் பதிவு காப்பீடு முகவர்களுக்கு எதிரானது அல்ல. காப்பீடு, முதலீடு இரண்டும் வேறு எனப் புரிய வைப்பது. வாகனத்திற்கு காப்பிடு அளிப்பது போல், இது உங்கள் வாழ்க்கைக்குக் காப்பீடு - முதலீடு அல்ல.

சரி, தங்களின் நிதி ஆலோசகர்களான எங்களுக்கு, தங்கள் முதலீடு பற்றி மட்டுமே அக்கறையா என்ன? தங்கள் வாழ்க்கைக் காப்பீட்டிலும் உதவுவோம் - சரியான காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்ய, அதே சமயம், அந்தப் பணம் உங்களுக்காக சிறந்த முறையில் உதவவும் !!

முதலில் எடுக்க வேண்டியது ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் - உங்கள் வாழ்க்கைக் காப்பீடு - உயிருடன் இருக்கும் பட்சத்தில் ரொம்பப் பெரிய இலாபம் வராது. அதனைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

காப்பீட்டுத் திட்டம் - வழக்கமான வழி மற்றும் எங்களின் வழி(ட்ராப்லெட் வழி)

வழக்கமான வழி
ட்ராப்லெட் வழி
பலன்கள்
காப்பீட்டிற்கு செலுத்தும் தொகை(வருடத்திற்கு)
 ₹ 117,720.00
   7,600.00
மிகக் குறைந்த தொகை செலுத்துதல்
உறுதிப்படுத்திய தொகை
20 லட்சம்
1 கோடி
5 மடங்கு அதிகம்
எவ்வளவு காலம் ஆபத்துக்கால காப்பீடு உள்ளது?
இறக்கும் வரை
48 வருடங்கள்
இதில் வழக்கமான திட்டமே வெல்கிறது
முதலீடு செய்ய இருக்கும் மீதமுள்ள தொகை
0
   110,120.00
முதலீடு செய்யும் வசதி தருகிறது
அதிகமுள்ள தொகையை முதலீடு செய்தல்

FD/PPF
பாதுகாப்பான பங்குகளில்
மிகுந்த பலன் தரும் பங்குகளில்
இலாபம் %
8%
12%
15%
முதலீடு செய்வதால் வரும் நிதி
   5,255,112.00
   8,441,227.00
   12,178,115.00
காப்பீட்டு முடிகையில் கிடைக்கும் தொகை
   4,496,400.00
   4,496,400.00
    4,496,400.00
இவை இல்லாமல் கிடைக்கும் தொகை
      758,712.00
   3,944,827.00
    7,681,715.00

மீதமுள்ள தொகையை முதலீடு செய்வதினால் வரும் இலாபம்

அதிக பணம்.
எளிதில் எடுக்கும்படியான தொகை அதிகரிப்பு. பொதுவாக, காப்பீட்டுத் திட்டங்களில், நினைத்தபோது பணம் எடுக்க முடியாது.
ஒரே சமயத்தில் நிறைய பணம் செலுத்தத் தேவையில்லை.6% செலுத்தினால் போதும். மீதம் வசதிப்படும்போது.
ஓய்வு காலத்தில் உபயோகப்படுத்த, தனியாக சேமித்துக் கொள்ளும் வசதி(முதலீடு செய்வதால் வரும் நிதியை இதற்குப் பயன்படுத்தலாம்.)
அதே நிதியைத் தேவைப்படும்போது, முழுதாகவோ, பகுதியாகவோ எடுத்துக்கொள்ளலாம்.

அடுத்தமுறை காப்பீட்டு முகவர்கள் தங்களை அணுகும் போது நினைவில் கொள்ளுங்கள்.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
-திருக்குறள் - தெரிந்துவினையாடல் - குறள் 517
அதனை அவன்கண்(தகுந்த திட்டத்தின்கண்) விடுகிறீர்களா??? தங்களுக்கு உழைக்கப்போவது குதிரையா இல்லை கழுதையா?




Comments

Popular posts from this blog

முயலும் ஆமையும் !!!

மாதம் 50 ஆயிரம் சம்பாதியுங்கள் - வாழ்க்கை முழுதும் !!!

ஆரோக்கியம் - உடலுக்கு மட்டும் தானா?