பரஸ்பர நிதி(Mutual Fund) மூலம் பணம் ஈட்டுவது எப்படி?
பெரும்பாலான
வாசகர்கள் எங்களிடம் கேட்கும் ஒரே கேள்வி
- பரஸ்பர நிதியின் மூலமாக, பங்குகளில்
முதலீடு செய்வது எப்படி?
எங்களுக்கு
மகிழ்ச்சியாகவும் அதே சமயம் பதற்றமாகவும்
இருக்கிறது. வாசகர்கள் நாங்கள் எழுதுவதைப் படித்து,
இந்த அருமையான முதலீடு பற்றித்
தெரிந்துகொள்ள முயற்சிப்பதில் மகிழ்ச்சி. அனைவருக்குமே தெளிவாகப் புரியும் வகையில் விளக்க
முயற்சிப்பதில் பதற்றம்.
பரஸ்பர நிதியின் வருமானத்தைப் பற்றிப்
பார்க்கலாம்.
பரஸ்பர நிதி பங்குகளோடு சம்பந்தப்பட்டது.
அதனால், அவை அளிக்கும் வருமானம்
வரைபடத்தில் நேர்கோடாக, கீழ்க்காணும் வரைபடம் போல் இருக்கப்போவதில்லை.
ஆனால், இது போல இருக்கும்.
இரண்டு விதங்களிலும், 2021ல், 150 தான். ஆனால்,
தொகை 5 வருடங்களில் ஒரே சீராக உயருவதில்லை. பரஸ்பர
நிதியில் வருமானம் அதிகமாக இருக்கும்
நாள், குறையும் நாள், மாற்றம்
இல்லா நாள் என மாறி
மாறி வரும், ஆனால், இறுதியில்
அதிக வருமானம் வருவது இதில்
தான்.
எடுத்துக்காட்டுக்கள்
போதும்.
"சுந்தரம்
செலெக்ட் மிட்கேப் நிதி(Sundaram Select Midcap Fund)" - என்ற
பரஸ்பர நிதியை எடுத்துக் கொள்வோம்.
ஏன் இது? டி.வி.எஸ் குடும்பத்தினரது இந்த
நிதி. டி.வி.எஸ்
மோட்டார்ஸ், டி.வி.எஸ்
டயர்ஸ், சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ்,
சுந்தரம் ஃபைனான்ஸ் என, பலப்பல முதிலீட்டாளர்களை
உருவாக்கிய நிறுவனம். இந்த சிறந்த வம்சாவளியைச்
சேர்ந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதாக நினைத்துக்கொள்வோம்.
இந்நிதி(சுந்தரம் செலெக்ட் மிட்கேப்
ஃபண்ட்) துவங்கியது 2002ல். அப்போதிருந்தே 29% இலாபம்
அளிக்கிறது. அப்படி என்றால் என்ன?
கீழே உள்ள அட்டவணையைப் பாருங்கள்.
1,00,000 பணத்தை வங்கியில் நிரந்தர வைப்பு நிதியாக
போடுவது, சுந்தரம் செலெக்ட் மிட்கேப்
ஃபண்ட்-ல் முதலீடு செய்வது
- இவற்றின் ஒப்பிட்டுள்ளோம்.
இரண்டிற்கும்
வித்தியாசம் மட்டுமே 4,194,500.
ஆனால், இதில் ஏற்ற இறக்கம்
இருக்கத்தானே செய்யும்? 2007ல் இருந்து, இந்த
நிதியின் ஏற்ற இறக்கங்களைக் காணலாம்.
2007 முதல் 2018 வரை இரண்டு பெரிய
சரிவுகள் நடந்துள்ளது பங்குச் சந்தையில்.
- 2008 பங்குச் சந்தை சரிவு
- 2011ல் நடந்த ஊழல்களால்(2ஜி அலைக்கற்றை, நிலக்கரி ஊழல், ஆதர்ஷ் ஊழல்) ஏற்பட்ட சரிவு.
இந்த காலகட்டத்தில், இந்த நிதி எப்படி
இருந்தது? வரைபடத்தைப் பார்க்கவும்.
2008ல் ஒவ்வொரு 100 ரூபாயும் 58 ஆக குறைந்துள்ளது.
2011ல் ஒவ்வொரு 100 ரூபாயும் 23 ஆக குறைந்துள்ளது.
மற்ற வருடங்களிலெல்லாம் ஏற்றம் மட்டுமே.
35% சரிவு
இருந்தாலும், அனைத்தையும் அடித்துத் தள்ளியது.
இப்போது
எல்லா முதலீட்டாளர்கள் கேட்பது இது தான்.
சரிவு இருக்கும் அந்த இரண்டு வருடங்களைத்
தவிர்க்கல்லாமா? 2008, 2011
போன்ற தருணங்களில், பங்குச் சந்தையிலிருந்து விலகலாமா?
எங்கள் பதில் - இல்லை !!!
ஏனென்றால்,
நிதி அறிவுரையாளர்களான எங்கள் பணி -
உங்கள் குறிக்கோளை அறிந்து கொண்டு, உங்களுக்கான
சிறந்த முதலீடுகளைத் தேர்ந்தெடுப்பது.
உங்கள் குறிக்கோளை விட்டு நீங்கள் விலகாத
வண்ணம் உதவுவது.
குறிக்கோளை
அடைந்தவுடன், உங்கள் நிதி நிலைமையை
மறுபடி ஆராய்ந்து, மேலும் உதவுவது.
Comments
Post a Comment