முயலும் ஆமையும் !!!
முயலும் ஆமையும் முயல் ஆமை கதை தெரியும் உங்களுக்கு . இங்கே சிலச் சின்ன மாற்றங்களுடன் !! முயலும் ஆமையும் நண்பர்கள்தாம் .. எதிரும் புதிருமான நண்பர்கள் . இருவரும் முதல் சம்பளம் வாங்கியதும் , மாதம் 10,000 சேமிக்கத் துவங்கினர் . இருவரும் எதிர் துருவங்கள் அல்லவா ? முயல் பங்குச் சந்தையை த் தேர்ந்தெடுத்தது . மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தது . ஆமையோ , நிலையான வைப்பு நிதியில் ( பிக்ஸட் டெபாசிட் ), பொது வருங்கால வைப்பு நிதியில் ( பி . பி . எஃப் ) முதலீடு செய்தது . எவரின் ஏளனத்தாலும் கலக்கமடையவில்லை ஆமை . புன்னகையோடு தலை திருப்பி , பி . பி . எஃப் - ல் பணம் போட்டது . முயல் பங்குச் சந்தையை கவனிப்பதில் முனைப்பு காட்டியது . வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தது . ப்ளூசிப் எனும் அதிக ஆபத்தில்லா பங்குகள் வாங்குவதில் ஈடுபட்டது . ஆமை ஒவ்வொரு வருடமும் மாத சேமிப்புத் தொகையை 10% உயர்த்தியது . பத்து வருடங்கள் கழிந்தன . முயல் 15% கூட்டு இலாபாமாக 28 லட்சங்கள் வைத்திருந்தது . " அருமை .