காலவரையறையற்ற சலுகை - வீட்டுக் கடன் 50% தள்ளுபடி!!!
சமீபத்தில் , ஒரு பிராண்டட் துணிக்கடையில் ஒரே கூட்டம் . சும்மாவா ? ஐம்பது சதவிகிதம் தள்ளுபடியாம் . ஒரே வாரத்தில் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன . பிராண்டட் துணிவகைகள் அனைவருக்கும் அத்தியாவசியமல்ல . சற்று யோசித்துப்பாருங்கள் . அத்தியாவசிய , அனைவருக்கும் கண்டிப்பாக தேவையான பொருள் 50 சதவிகித தள்ளுபடியில் கிடைத்தால் ? கூட்டம் எப்படி இருக்கும் ? அதனால் , இப்போது அனைவரும் ஏங்கும் " சொந்த வீடு " பற்றி இப்பொது சிந்திக்கலாம் . சில மனிதர்களைப் பார்க்கிறேன் . எந்தத் திட்டமும் இல்லாமல் , வீடு வாங்கி , ஆரம்ப காலம் முதலே மாத வட்டி கட்டத் திணறுவார்கள் . அளவான சம்பளம் ஆனால் வட்டியோ வரவுக்கு மிஞ்சி . சரி , இப்போது சரியான கணக்கைப் பார்ப்போம் . முக்கிய குறிப்புகள்: 1. ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் சராசரி விலை 40 லட்சம் . 2. வீடு வாங்குபவர் கையில் வைத்திருக்க வேண்டிய தொகை ~6 லட்சம் . வங்கியில் வீட்டுக் கடன் ~34 லட்சம் . வட்டி 8.65%. 15 வருடங்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் . மாதம