மாதம் 50 ஆயிரம் சம்பாதியுங்கள் - வாழ்க்கை முழுதும் !!!
மாதம் 50 ஆயிரம் சம்பாதியுங்கள் - வாழ்க்கை முழுதும் !!! Click here to read in English எப்படி ? முடியுமா என்ன ? சரி . இந்தப்பதிவின் தலைப்பு ஒரு பொய் . நீங்கள் முறைப்பது தெரிகிறது . " தன் வினைத் தன்னைச் சுடும் " என்பதறிவேன் . ஆனால் , " தர்மம் தலை காக்கும் " என்றும் அறிவேன் . பொய் தலைப்பு வைத்ததற்காக வினை என்னைச் சுடும் முன் , தர்மம் காக்கட்டும் . தலைப்பை உண்மையாக்கினால் என்ன ?? எங்கள் பதிவுகள் அனைத்தும் நீங்கள் தொடர்ந்து வாசித்திருந்தால் 2 வார்த்தைகளே அனைத்திலும் ஆக்கிரமித்துள்ளதை அறிவீர்கள் - சேமிப்பு , கூட்டு வட்டி . வாசகர்கள் அனைவருக்கும் புரியும் வரை , மீண்டும் அவையே !!! சேமிப்பு - 40+ வயதுடைய சிலவற்றை அணுகிய போது தெரியவந்தது . பெரும்பாலானவர்களின் , மொத்தக் குடும்பத்தின் வருமானம் குறைந்தபட்சம் 1,00,000. எங்கள் ஆலோசனை என்னவென்றால் , 30% சேமியுங்கள் . 1,00,000 வருமானம் எனில் , 30,000 சேமியுங்கள் . இது 8 வருடங்களுக்கு . அதன் பின்னர் , சேமித்தத் தொகையை 7 வருடங்களுக்கு , முதலீடு செய்யுங்கள் .